இந்தியா, ஏப்ரல் 4 -- ஏப்ரல் 4, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் தனுஷ் - நயன்தாரா இணைந்து நடித்த யாரடி நீ மோகினி, சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதில் யாரடி நீ மோகினி, மான் கராத்தே போன்ற படங்கள் ஹிட்டாகியுள்ளன. ஏப்ரல் 4ஆம் தேதி வெளியான படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன், கே. விஸ்வநாத், கார்த்திக் குமார், கருணாஸ், சரண்யா மோகன் உள்பட பலர் நடித்த ரெமாண்டிக் காமெடி படமாக 2008இல் வெளிவந்த படம் யாரடி நீ மோகினி. தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ் ,த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆடவாரி மாட்லாக்கு அர்த்தாலே வேறுலே படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்க...