இந்தியா, மார்ச் 30 -- மார்ச் 30, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் தனுஷ் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த '3', விக்ரம் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும், சிவாஜி கணேசனின் கிளாசிக் ஹிட் படம் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்கை பற்றி சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

டி யோகானந்த் இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சரோஜா தேவி ஜோடியாக நடித்து 1962இல் வெளியான உணர்வுபூர்வமான குடும்ப திரைப்படம் வளர்பிறை. டி.எஸ். பாலையா, எம். ஆர். ராதா, கே.ஏ. தங்கவேலு உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் சிவாஜி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படத்தில் வாய் பேச முடியாதவராக தோன்றும் சிவாஜி கணேசன் முகபாவனைகளால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருப்பார். ஜோசியம், ஜாதகத்தை மையப்படுத்திய கதையமச்சித்தில் அமைந்திருக்கும் இந்த படத்தின் பிரதி தற்போது இல்லை என கூற...