இந்தியா, ஏப்ரல் 9 -- ஏப்ரல் 9, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் தமிழில் உருவான முதல் பான் இந்தியா படம் என்ற புகழை பெற்ற சந்திரலேகா, ஜெமினி கணேசன் நடித்த காதல் காவியம் கல்யாண பரிசு, விஜயகாந்த் நடித்த அரசாங்கம், பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்த பொன்னார் சங்கர் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 9ஆம் தேதியில் வெளியாகியிருக்கும் இந்த படங்கள் பற்றி சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

எஸ். எஸ். வாசன் மிக பிரமாண்டமாக தயாரித்து, இயக்க எம்.கே. ராதா, டி.ஆர். ராஜகுமாரி, ரஞ்சன், என். எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் உள்பட பலர் நடித்து வரலாற்று சாகச திரைப்படமாக 1948இல் வெளியானது சந்திரலேகா.

நாட்டிய கலைஞரான சந்திரலேகாவை திருமணம் செய்து, நாட்டை ஆட்சி செய்யப்போவது யார் என இரு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் மோதலே படத்தின் கதை. தமிழ் மற்றும் இந்...