இந்தியா, ஏப்ரல் 7 -- ஏப்ரல் 7, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த காற்று வெளியிடை, புதுமுக ஹீரோ வெற்றி நடித்த 8 தோட்டாக்கள் ஆகிய படங்கள் வெளியாக கவனத்தை பெற்றன. ஏப்ரல் 7ஆம் தேதியில் வேறு பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதீதி ராவ் ஹெய்தரி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ரெமாண்டிக் படமாக 2017இல் வெளிவந்த படம் காற்று வெளியிடை. படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ், ருக்மிணி விஜயகுமார் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

1999 காலகட்டத்தில் கார்கில் போர் பின்னணியில் படத்தின் கதை அமைந்திருக்கும். இந்திய விமான படை பைட்டர் பைலட்டாக வரும் கார்த்தி, போர் கைதியாக பாகிஸ்தான் சிறையில் அடைப்பட்டு, பின் அங்கிருந்து தப்பித்து நாடு திரும்பி தனத...