இந்தியா, ஏப்ரல் 13 -- ஏப்ரல் 13, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆரின் மதுரைவீரன், சிவாஜி கணேசனின் தெயவப்பிறவி, ரஜினிகாந்த் - பிரபு நடித்த குரு சிஷ்யன், கமல்ஹாசன் நடித்த சிங்காரவேலன், மாதவன் நடித்த டும் டும் டும், சிம்பு நடித்த தம் போன்ற பல்வேறு ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நாளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

டி. யோகானந்த் இயக்கத்தில் கண்ணதாசன் திரைக்கதை எழுத எம்ஜிஆர், பானுமதி, பத்மினி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து 1986இல் வெளியான படம் மதுரை வீரன். எம்ஜிஆருக்கு சில்வர் ஜூப்ளி படமாக அமைந்த இந்த படம் 200 நாள்களுக்கு மேல் ஓடியது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ. 1 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது

கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி பிரதான கதாபாத்திரத்தில...