இந்தியா, ஏப்ரல் 2 -- ஏப்ரல் 2, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் சினிமா கேரியரில் திருப்புமுனை தந்த படம், கார்த்தியின் அற்புத நடிப்பில் வெளியாகி ஹிட்டான இரண்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன. இது தவிர ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் கவர்ந்த படங்களை பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் எம்ஜிஆர் ஹீரோவாக நடிக்க, கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதி 1950இல் வெளியான வரலாற்று ஆக்சன் திரைப்படம் மருதநாட்டு இளவரசி. படத்தில் ஹீரோயினாக வி.என். ஜானகி நடித்திருப்பார். எம். ஜி. சக்கரபாணி, பி.எஸ். வீரப்பா உள்பட பலர் நடித்து இந்த படம் எம்ஜிஆர் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை தந்தது. படத்தின் எம்ஜிஆரின் நடிப்பு, ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்துக்கு பின்னர் எம்ஜிஆர் - வி.என்.ஜானகி...