இந்தியா, ஏப்ரல் 11 -- ஏப்ரல் 11, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் ஹீரோவான அறிமுகமான ராஜகுமாரி, சிவாஜி கணேசனின் சூப்பர் ஹிட் படங்களான ஹரிச்சந்திரா, வியட்நாம் வீடு, சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் இணைந்து நடித்த விடுதலை, ரவி மோகன் - ஜெனிலியா க்யூட்டான நடிப்பில் ரசிகர்கள் கவர்ந்த சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 11ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் வெளியாகியிருக்கும் இந்த படங்கள் பற்றி சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கத்தில் எம்ஜிஆர் கே. மாலதி, டி.எஸ். பாலையா, எம். என். நம்பியார் உள்பட பலர் நடித்து வரலாற்று படமாக 1947இல் வந்த படம் ராஜகுமாரி. 1930களில் இருந்தே சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்ஜிஆர், முதல் முறையாக ஹீரோவாக இந்த படத்தில் நடித்தார். எதிரி நாடுகளில் இருந...