இந்தியா, மார்ச் 20 -- மார்ச் 20, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியாகி இருக்கின்றன. மார்ச் 20இல் ரிலீசான தமிழ் படங்களில் ரசிகர்களை கவர்ந்த படங்களாக இருந்து வரும் மனசெல்லாம், தங்க மனசுக்காரன் என இரு படங்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு

அறிமுக இயக்குநர் ராஜவர்மன் இயக்கத்தில் முரளி, சிவரஞ்சனி, எம்.என். நம்பியார், விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்து ரெமாண்டிக் படமாக 1992இல் வெளியானது தங்கமனசுக்காரன். இசைக்கலைஞராக இருந்து வரும் முரளி, சிவரஞ்சனி ஆகியோருக்கு சிறு வயதிலேயே காதல் ஏற்படுகிறது. ஆனால் காதலுக்கு பிரச்னை ஏற்பட ஊரை விட்டு செல்லும் முரளி, பின்னாளில் கிட்டாரிஸ்டாக திரும்பிகிறார். இதன...