இந்தியா, மார்ச் 19 -- மார்ச் 18, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் பாலசந்தர் இயக்கத்தில் சிறந்த கிளாசிக் திரைப்படமான நூற்றுக்கு நூறு வெளியானது. இது தவிர அர்ஜுன், ஜீவா போன்றோர் ஹிட் படங்களும் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படங்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு

மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் ஜெய்சங்கர், லட்சுமி, நாகேஷ், ஸ்ரீவித்யா, ஜெமினி கணேசன், ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக 1971இல் வெளியான படம் நூற்றுக்கு நூறு.

கல்லூரி பேராசிரியராக இருக்கும் ஜெய்சங்கருக்கு திருமணம் நடக்க இருக்கும் நிலையில் மூன்று கல்லூரி பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். இதன் பின்னணி என்ன, இதிலிருந்து ஜெய்சங்கர் எப்படி மீள்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை...