இந்தியா, ஏப்ரல் 5 -- ஏப்ரல் 5, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த, ஆர்யா நடித்த சேட்டை, ராம்கி நடித்த இரட்டை ரோஜா போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதில் இரட்டை ரோஜா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த குடும்ப திரைப்படமாக அமைந்திருந்தது. ஏப்ரல் 5ஆம் தேதி வெளியான படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

ராம்கி, ஊர்வசி, குஷ்பூ பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க கேயார் இயக்கத்தில் குடும்ப திரைப்படம் 1996இல் வெளியான படம் இரட்டை ரோஜா. சுஹாசினி, ஸ்ரீவித்யா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சின்னி ஜெயந்த், பாண்டு உள்பட பலரும் இந்த படத்தில் நடித்திருப்பார்கள்.

கணவன் - மனைவியாக ராம்கி - ஊர்வசி ஆகியோர் மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ராம்கியை ஒருதலையாக காதிலிக்கிறார் குஷ்பூ. பணம் மீது ஆசை கொண்ட ஊர்வசிக்கு ப...