இந்தியா, மார்ச் 21 -- மார்ச் 21, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் கே.ஆர். விஜயா கதையின் நாயகியாக நடித்த படம், இயக்குநர் சுந்தர் சி நடித்த பக்கா கமர்ஷியல் படமான சண்ட, அட்டகத்தி தினேஷ் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய குக்கூ போன்ற படங்கள் வெளியாகி இருக்கின்றன. முந்தையை ஆண்டுகளில் மார்ச் 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு

கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் கே.ஆர். விஜயா கதையின் நாயகியாக நடித்து 1980இல் வெளியான படம் மங்கலநாயகி. இந்தியில் சூப்பர் ஹிட்டான சாஜன் பினா சுஹாகன் படத்தின் ரீமேக்காக உருவாகி தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் சரத்பாபு, ஸ்ரீகாந்த், ஷோபனா, மனோரமா, நிஷா உள்பட பலரும் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் தான் நடிகை ஷோபனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

விதவை திருமணம், பெண்களுக்கு ...