இந்தியா, ஏப்ரல் 15 -- ஏப்ரல் 15, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சத்யராஜ் நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வண்டிச்சோலை சின்ராசு ஆகிய படங்களும், மணிரத்னம் இயக்கத்தில் பிரபு மற்றும் கார்த்திக் இணைந்து நடித்த அக்னி நட்சத்திரம் படமும் வெளியாகியுள்ளன. ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்ற இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

ஃபாசில் இயக்கத்தில் சத்யராஜ், சுஹாசினி, ரகுவரன், ரேகா, குழந்தை நட்சத்திரமாக கீது மோகனதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து பேமிலி ட்ராமா பாணியில் உருவாகி 1988இல் வெளியான படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. மலையாளத்தில் ஃபாசில் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான என்டே மாமட்டுக்குட்டியம்மாக்கு படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றது.

விபத்தில் தங்களது...