இந்தியா, பிப்ரவரி 7 -- Tamil Calendar 07.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், பிப்ரவரி 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று பொதுவாக மகாலட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியைத் தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் இந்த சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் அள்ள அள்ள குறையாத செல்வங்களும், பணமும் பெருகுவதாக ஐதீகம் உண்டு.

அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் அரசமடித்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபம் ஏற்றி, 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று பூஜைக்கு உரிய நல்ல ...