இந்தியா, மார்ச் 29 -- "முந்தா நாள் தோன்றிய கட்சிக்கு பதில் சொல்ல வேண்டுமா?" என விஜய் குறித்த கேள்விக்கு திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர். பாலு தெரிவித்து உள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காததைக் கண்டித்து, திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக-வின் 850 ஒன்றியக் கிளைகளைச் சேர்ந்த 1,170 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மேலும் படிக்க:- EPS vs Vijay: திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டியா? விஜய்யின் பேச்சுக்கு எடப்பாடி பதிலடி!

தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு மாதங்களாக சுமார் 4,304 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் விடுவிக்கப்படவி...