இந்தியா, பிப்ரவரி 5 -- தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக குணச்சித்திரம், காமெடி கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தவர் டி.பி. கஜேந்திரன். 1983 முதல் 2023 வரை தமிழ் சினிமாவில் பயணித்த முக்கிய நபராக இருந்துள்ளார். இவரது அண்ணியும் பழம்பெரும் நடிகையுமான டி.பி. முத்துலட்சுமி தான், இவர் சினிமாவில் நுழையவும், தனக்கென தனி இடத்தையும் பிடிக்கவும் காரணமாக இருந்தார்ம என சொல்லப்படுகிறது. 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் டி.பி. கஜேந்திரன், 100க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

1980களின் தொடக்கத்தில் மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர், விசு ஆகியோரின் உதவியாளாராக பணியாற்றினார். விசுவின் டவுரி கல்யாணம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர், அதன் பின்னர் அவரது சிதம்பர ரகசியம்...