இந்தியா, மார்ச் 20 -- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நட்ச்சத்திர வீராங்கனையும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி. சிந்து தோல்வியை தழுவி வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிரியான்ஷு ராஜாவத், சங்கர் சுப்பிரமணியன் ஆகியோர் அடுத்தசுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சுவிஸ் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் பி.வி. சிந்து, மாளிவிகா பன்சோத், இஷாராணி பருவா, ஆகர்ஷி காஷ்யப், அன்மோல் கர்ப், அனுபமா உபாத்யாயா, ரக்‌ஷிதா ராமராஜ் ஆகியோர் களமிறங்கினார். இதில் அடுத்த சுற்றுக்கு அனுபமா உபாத்யாயா, இஷாராணி பருவா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து தனது முதல் போட்டியில் டென்மார்க்கின் ஜூலி ஜேக்கப்சனை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த போட்...