இந்தியா, மார்ச் 28 -- கோடை காலம் என்றாலே பல்வேறு வகையான ஜூஸ்களை பருகி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதில் நாம் அதிக கவனம் செலுத்துவது இயல்புதான். பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ்களை காட்டிலும் பிரஷ் ஜூஸ்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுடன், ஆற்றலையும் இழக்காமல் பார்த்துக்கொள்கிறது.

அதேசமயம் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சில ஜூஸ் வகைகள் நன்மைகளை தருகின்றன. அந்த வகையில் வயிற்று புண்களை குணமாக்குவது முதல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக சாத்துக்குடி ஜூஸ் உள்ளது.

சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த சாத்துக்குடியில் வைட்டமின் சி, பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. என்னதான் சிட்ரஸ் குடும்பமாக இருந்தாலும் மற்ற சிட்ரஸ் பழங்களை காட்டிலும் அமிலத்தன்மையானது குறைவாகவே உள்ளது.

இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு ...