இந்தியா, ஏப்ரல் 6 -- நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், டெஸ்ட். இந்தப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அண்மையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் இந்தப்படம் தொடர்பாக நடிகரும், அரசியல் விமர்சகருமான எஸ்.வி.சேகர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், 'என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது' என்று பதிவிட்டு இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பெருமிகு கிரிக்கெட் வீரர் அர்ஜூன் (சித்தார்த்). ஃபார்ம் இல்லாமல் தவிக்கும் சித்தார்த்திற்கு, பாகிஸ்தானுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி, பெருமையோடு ஓய்வு பெற வேண்டும் என்கிற ஆ...