இந்தியா, பிப்ரவரி 11 -- Suzhal The Vortex: அமேசன் பிரைம் வீடியோ அதனின் ஒரிஜினல் கிரைம் த்ரில்லர் தொடரான 'சுழல் வோர்டெக்ஸ்' சீரிஸின் 2 வது சீசனை வெளியிடும் தேதியை அறிவித்து இருக்கிறது.

இது குறித்து அமேசான் வெளியிட்டு இருக்கும் செய்திகுறிப்பில், 'ஒரு பரபரப்பான மனதைக் கவரும் ஒரு க்ரைம் திரில்லரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2, தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி காட்சி ரீதியாக பிரமிக்க வைக்கும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு, பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2, குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் மனித உணர்வுகளின் இயக்க கூறுகளுடன் பின்னி...