இந்தியா, பிப்ரவரி 18 -- Suzhal-The Vortex: பிரைம் வீடியோவின் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' முதல் சீசனை போல் பல திருப்பங்கள் கொண்டதாக இருக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் இணைய தொடரான சுழல் - தி வோர்டெக்ஸ். இந்த பாகத்தின் முதல் சீசன் பெரும் வரவேற்பை பெற்றதோடு, தேசிய விருதையும் வென்றது.

தமிழ்நாட்டின் காளிபட்டிணம் எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர அஷ்ட காளி திருவிழாவின் பின்னணியில், புதிய மர்ம முடிச்சுகளுடன் இந்த இணைய தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. குடும்ப பிணைப்புகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல், பயம் ஆகிய கரு பொருள்களுடன் கூடிய சுழல்- தி வோர்டெக்ஸ் உருவாகி இருக்கிறது.

இந்த வெப் தொடரானது காளி பட்டிணத்தின் சிக்கலான சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் அச்ச...