இந்தியா, பிப்ரவரி 14 -- Suriyan Jackpot: நவகிரகங்களின் தலைவன் பதவியை வகித்து வருபவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கின்றார். அப்போது தமிழ் மாதம் பிறக்கின்றது.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் 12 ராசிகளுக்கும் சூரிய பகவான் தாக்கத்தை கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும் தற்போது சனி மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். எதிரி கிரகங்களாக இருந...