இந்தியா, பிப்ரவரி 6 -- Surgery :ஒவ்வொருவரும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய ஒரு கட்டாய சூழல் வாழ்நாளில் வரும். அது நமக்காகவும் நம்மை சார்ந்தவர்களுக்காக கூட இருக்கலாம். ஒவ்வொரு பிரச்சனையும், அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, மருத்துவர்களின் உதவி தேவை. அதனால்தான் மக்கள் மருத்துவர்களை கடவுளாகக் கருதுகிறார்கள். ஆனால், தேவையின் பொருட்டு மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அறுவை சிகிச்சை அரங்கிற்குச் செல்லும்போது, அனைத்து மருத்துவர்களும் அவரோடு சேர்ந்து பணியாற்ற உள்ள மருத்துவ ஊழியர்களும் நீலம் மற்றும் பச்சை நிற ஆடைகளை மட்டுமே அணிந்து இருப்பதை நாம் பார்க்க முடியும். மக்கள் ஏன் அந்த இரண்டு வண்ணங்களை அணிகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

அறுவை ...