இந்தியா, மார்ச் 19 -- Sunitha Williams Food : நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் அமெரிக்க உள்ளூர் நேரப்படி புளோரிடாவின் கடற்கரையிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூலில் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமையன்று பூமிக்குத் திரும்பினர். போயிங்கின் ஸ்டார்லைனர் கிராஃப்டில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஐ.எஸ்.எஸ்ஸில் ஒரு வார காலம் தங்க திட்டமிட்ட அவர்கள், தற்போது ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்துள்ளனர்.

பூமியிலிருந்து 254 மைல்கள் (409 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்), உலகம் முழுவதிலுமிருந்து விண்வெளி வீரர்களை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக வரவேற்று வருகிறது. கால்பந்து மைதான அளவிலான ஆராய்ச்சி ஆய்வகத்தை அமெரிக்காவும், ரஷ்யாவும் முதன்மையாக நிர்வகிக்கின்றன இது அறிவியல் ஒத்துழைப்புக்கான முக்க...