இந்தியா, மார்ச் 7 -- இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர், கேப்டனாக இருந்து வந்த சுனில் சேத்ரி, கடந்த ஆண்டில் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது இந்திய அணியில் மீண்டும் களமிறங்கி இருக்கிறார். மார்ச் மாதம் பிபா நடத்தும் சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்கிறார்.

இந்த மாதம் மாலத்தீவு அணிக்கு எதிராக நடைபெறும் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி, 2027 ஆசிய கோப்பை குவாலிபயர் போட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிராக விளையாடவுள்ளார். மார்ச் 19ஆம் தேதி மாலத்தீவுக்கு எதிரான போட்டியில், மார்ச் 25ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் மேகாலயா மாநிலத்தில் இருக்கும் ஷில்லாங் நகரில் நடைபெறுகின்றன.

மேலும் படிக்க: ஒய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி

"ஆசிய கோப்பைக்கான தகுதி மிகவும் மு...