இந்தியா, பிப்ரவரி 16 -- ஞாயிற்றுக்கிழமை என்றாலே நமது வீட்டில் அசைவ உணவு என்பது கட்டாயமான ஒன்று ஆகும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய வேளையில் அசைவ உணவுகளை செய்து சாப்பிட்டு உறங்கினால் நமக்கு அந்த நாள் நன்றாக முடிந்து விடும். அந்த அளவிற்கு ஞாயிற்றுக்கிழமைக்கும் அசைவ உணவுகளுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது என்றே கூறலாம். நாம் வழக்கமாக வீட்டில் அசைவ உணவுகள் சமைப்பது என்றால் குழம்பு, பொரியல், வறுவல் ஆகியவற்றை மட்டுமே செய்கிறோம். இது மதிய வேளைக்கு சரியான உணவாக இருக்கும். ஆனால் காலையிலும், இரவிலும் கூட அசைவ உணவுகளை வைத்து சமையல் செய்ய முடியும். அதில் முக்கியமான ஒரு உணவு வகை தான் கறி தோசை. தென் மாவட்டங்களில் பிரபலமாக இருக்கும் கறி தோசைக்கு மதுரை போன்ற ஊர்களில் சிறப்பு கடைகள் கூட உண்டு. அந்த அளவிற்கு கறி தோசை மீது மக்கள் அதிகம் விருப்பம் கொண்டுள்...