இந்தியா, பிப்ரவரி 23 -- ஞாயிற்றுக் கிழமை வந்து விட்டாலே போதும் நம் குடும்பங்களின் உணவு நிச்சயமாக அசைவ உணவு இருக்கும். இது எழுதப்படாத ஒரு விதியாகவே மாறி விட்டது. அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிக்கன், மட்டன் மற்றும் மீன் என கறி கடைகளில் வியாபாரம் தூள் கிளப்பும். ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை தான் பொறுமையாக அசைவ உணவு சமைப்பதற்கு நமக்கு நேரம் இருக்கிறது. எனவே இந்த நாளில் பெரும்பாலானோர் வீட்டில் அசைவ உணவு கட்டாயமாக செய்யப்படுகிறது. ஆனால் நாம் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை என்றால் சிக்கன், மட்டன் அல்லது மீன் போன்ற உணவுகளையே சாப்பிட்டு வருகிறோம். சிலருக்கு வித்தியாசமான புது உணவுகளை செய்வதில் தயக்கம் இருக்கலாம். புது வித உணவுகளை செய்யும் போது எப்பொழுதும் அது சரியாக வந்துவிட வேண்டும் என்ற பயம் இருக்கும். ஆனால் இனி கவலைப்பட வேண்டாம். சிக்கன், மட்டன் போன்ற அச...