இந்தியா, பிப்ரவரி 23 -- இந்தியாவில் குளிர்காலம் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் கோடைக்காலம் தொடங்க உள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தான் வெயில் தொடங்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உலக வெப்பமயமாதல் காரணமாக பிப்ரவரி இறுதியில் இருந்தே கடுமையான வெப்பம் தொடங்குகிறது. மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த அதிகபட்ச வெயிலின் காரணமாக மக்களுக்கு அசெளகர்யம் உண்டாகிறது. மேலும் பல உடல் நல பிரச்சனைகள் கூட வர வாய்ப்புள்ளது. எனவே வீட்டையும் நமது உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு சிலர் ஏசியை நாடுகின்றனர். இதற்கு அதிக மின்சாரம் செலவாகிறது. இயற்கையாகவே சில முறைகளில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம். அது என்னவென்று இங்கு காண்போம்.

கோடைக்காலம் தொடங்கி விட்டது. அடுத்த சில மாத...