இந்தியா, பிப்ரவரி 12 -- இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் எனப்படும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் முடிந்து விட்டன. கோடை காலம் பொதுவாக மார்ச் மாதத்தின் இறுதியில் வரும். ஆனால் பிப்ரவரி தொடங்கியதில் இருந்தே குளிர் குறைந்து வெயில் அதிகரித்து வருகிறது. அதிலும் மாலை நீண்ட நேரம் வரை வெயில் இருக்கிறது. இந்த சமயத்தில் தான் அதிகமான திருமணம் மற்றும் பல விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு மேக்கப் போட்டு சென்றால் வெயிலால் களைந்து விடும். அதிகமாக வியர்த்து அந்த மேக்கப் முழுவதுமாக களைந்து பார்ப்பதற்கே சற்று மோசமாக தெரியும். மேக்கப் போடாமல் சென்றாலும் வெயிலால் முகமே சற்று வாடிப் போகும் வாய்ப்பு உள்ளது.

கோடை காலம் பெரும்பாலும் கொண்டாட்டத்திற்கான காலமாகும். கோடைகாலத்தில் திருமணங்கள் மற்றும் பிற விருந்துகள் அதிகமாக ...