இந்தியா, மார்ச் 25 -- இந்திய பேட்மிண்டன் விளையாட்டில் இரட்டையர் பிரிவு போட்டியில் பல பதக்கங்களை வென்ற வீரராக திகழ்ந்த பி. சுமீத் ரெட்டி ஓய்வை அறிவித்துள்ளார். இந்தியன் டபுள்ஸ் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் இவர் 2022 காமன்வெல்த் போட்டிகளில் கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் வெள்ளி வென்றார்.

இதையடுத்து 33 வயதாகும் சுமீத் ரெட்டி, ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், பேட்மிண்டன் பயிற்சியாளராக முழு கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த சுமீத் ரெட்டி, மனு அட்ரி உடன் இணைந்து ஆண்கள் இரட்டையர் பிரிவு ஜோடியாக இந்தியாவுக்காக பல போட்டிகளில் களமிறங்கியுள்ளார். அதேபோல் கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் பல்வேறு வீரர், வீராங்கனைகளுடன் விளையாடியுள்ளார். இவரது மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான சிக்கி ரெட்டியுடன் இணைந்து பல போட்டிக...