இந்தியா, பிப்ரவரி 16 -- நமது வீடுகளில் வழக்கமான காலை உணவு என்றால் அது எப்போதும் இட்லி, தோசை அல்லது பொங்கல் என மட்டுமே இருக்கும். இதையே மீண்டும் மீண்டும் சாப்பிட்டு நம் வீட்டில் உள்ளவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு இருக்கலாம். மேலும் வித்தியாசமான காலை உணவுகள் தெரியாமல் இருந்த காரணத்தால் தான் நாம் புதியதாக எதையும் முயற்சி செய்வதில்லை. மேலும் புதியதாக ஒரு உணவை செய்யும் போது அது சரியாக வருமோ என்ற சந்தேகம் வருகிறது. புது விதமான காலை உணவிற்கு ஸ்டஃப்டு சப்பாத்தி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதனை செய்வதும் மிகவும் எளிமை தான். வீட்டிலேயே சுவையான ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

2 கப் கோதுமை மாவு

3 உருளை கிழங்கு

1 தக்காளி

2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

கால் கப் கொத்தமல்லி இலை

2 பெரிய வெங்காயம்

ஒரு டீஸ்பூன் கரம் மசால...