இந்தியா, செப்டம்பர் 24 -- உத்தரப்பிரதேச மாநிலத்தில் சீதாப்பூரில் உள்ள பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் இருக்கும் மாணவரைக் கண்டித்துள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த மாணவர் நாட்டுத் துப்பாக்கி எடுத்து வந்து அவரை மூன்று முறை சுட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சிகளில், " மாணவர் கண்டித்த ஆசிரியரைத் துப்பாக்கிக் கொண்டு துரத்துகிறார். பின்னர் அந்த மாணவர் அவரை மூன்று முறை நாட்டுத் துப்பாக்கியால் சுடுகிறார். துப்பாக்கியை மாணவரிடம் இருந்து பிடுங்க முயற்சி செய்த ஆசிரியரைத் துப்பாக்கியின் பின்புறத்தைக் கொண்டு அந்த மாணவர் தாக்குகிறார். உடனே அருகிலிருந்தவர்கள் அந்த துப்பாக்கியைப் பிடுங்க முயற்சிக்கின்றனர். துப்பாக்கியுடன் அந்த மாணவர் தப்பி ஓடுகிறார்.

துப்பாக்கியுடன் தப்பி ஓடிய மாணவ...