இந்தியா, பிப்ரவரி 5 -- மைதிலி என்னை காதலி படத்தில் இடம்பெற்ற 'சலங்கை இட்டால் ஒரு மாது' பாடலை பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாட தயங்கியதாகவும், பின்னர் சரணத்தை கேட்ட பிறகு பாடியதாகவும் டி.ராஜேந்தர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கூறியுள்ளார்.

அதில் "எஸ் பி பாலசுப்பிரமணியம் என்னிடம் ஒரு பொன்மானை நான் காண பாடலின் பல்லவியை கேட்டார். பாலு அண்ணன் என்னிடம் எப்போதும் பாடலின் லிரிக்ஸ் கேட்க மாட்டார். பல்லவியை தான் கேட்பார். அப்படி இந்த பாடலை கேட்கும்போது நான் இந்த பாடலை பாடி காட்டினேன்.

"ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்

ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதை காண்பதில் எந்தன் பரவசம்" என பாடினேன். அப்போது இப்பாடலில் வரும் தகதிமிதோம் தே...