இந்தியா, ஏப்ரல் 5 -- சீன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செமிகண்டக்டர், மின்சார வாகனங்கள், ஏஐ தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்வதை பிரதானமாக கொண்டு உள்ளதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

ஸ்டார்ட் அப் மகாகும்ப் என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். இது இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதை சிந்திக்க வைப்பதாக அமைந்தது.

"இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இன்று என்ன செய்கின்றன? உணவு டெலிவரி ஆப்களை உருவாக்கி, படித்துவிட்டு வேலையில்லாத இளைஞர்களை குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களாக மாற்றி, ப...