விருதுநகர்,ஸ்ரீவில்லிபுத்தூர்,சென்னை, ஏப்ரல் 12 -- Srivilliputhur: 'எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விதி பிழிங்கி பதறிப் போய் இருக்கிறது திமுக கூட்டம்.. அதிமுக கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது..' என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பகுதியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ராஜதந்திரத்தோடு அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார். எடப்பாடியார் என்ன செய்வார்? என்ன செய்துவிட முடியும்? என்ன செய்யப் போகிறார்? என்று பொதுமக்களும் , செய்தி சேனல்களும்...