இந்தியா, ஏப்ரல் 2 -- ஸ்ரீ திவ்யாவின் தோழி ஷோபனா ரமேஷ், ஸ்ரீதிவ்யா கடைசி காலத்தில் பட்ட வேதனைகள் குறித்து, வாவ் தமிழா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

அவர் பேசும் போது, "ஸ்ரீதிவ்யாவை கல்யாணத்திற்கு முன்னர் அவ்வளவு அழகாக பார்த்துக் கொண்டார் ஜார்ஜ். அவர் ஒரு பக்கா மலையாளி. நல்ல கட்டு மஸ்தான உடல் அவருக்கு.

நானும், ஸ்ரீ திவ்யாவும் திருவனந்தபுரத்திற்கு அடிக்கடி செல்வோம். அப்படித்தான் ஜார்ஜ் உடனான பழக்கம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஸ்ரீதிவ்யாவின் பணத்தை நிர்வகிக்கும் அளவுக்கு அவர் நெருக்கமானார்.

ஆனால் எனக்கு அவர் அப்போதே ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பது நன்றாகவே தெரியும். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான், திடீரென்று வித்யாவின் அக்கவுண்டில் இருந்து, அவர் செக் கொடுக்காமலேயே பணம் சென்றிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ...