இந்தியா, பிப்ரவரி 12 -- Actress sriranjani: தன்னுடைய 20 வது வயதில் டிவி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை ஸ்ரீரஞ்சினி. அவரின் முகமும், உடலமைப்பும், அப்படியே அக்மார்க் லட்சுமி கடாட்சத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்க, இதைப்பார்த்த இயக்குநர் பாலச்சந்தர், அவருக்கு 'காசளவு நேசம்' டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

அதைப்பார்த்த மணிரத்னம் அவருக்கு 'அலைபாயுதே' படத்தில் மாதவனின் அண்ணியாக நடிக்க வாய்ப்புக்கொடுத்தார். மாதவனுடன் அடுத்தடுத்த படங்களிலும் சேர்ந்து நடித்த இவருக்கு, விக்ரமின் 'அந்நியன்' படத்தில் சதாவின் அம்மாவாக நடித்த கேரக்டர் திருப்பு முனை கதாபாத்திரமாக அமைந்தது.

அதன் பின்னர் அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்களில் பல்வேறு படங்களில் நடித்த இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அண்மையி...