இந்தியா, ஏப்ரல் 2 -- Srikalahasteeswara temple: சிவபெருமானுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்த வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபடு கிடையாது. திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தாலும் பஞ்சபூத தலங்கள் மிகவும் சிறப்புக்குரிய கோயில்களாக திகழ்ந்து வருகின்றன.

தென் கைலாயம் என அழைக்கப்படும் திருகாளகஸ்தியில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் காளத்தியப்பர், காளத்தீஸ்வரர் எனவும் தாயார் ஞானபிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை, ஞானசுந்தரி, ஞானாம்பிகை என்று திருநாமத்தில் அழைக்கப்பட்டு வர...