இந்தியா, பிப்ரவரி 16 -- Sreeleela: கார்த்திக் ஆர்யனுடன் புதிய பாலிவுட் படத்தில் நடிப்பதன்மூலம், இந்தியில் அறிமுகம் ஆகிறார், நடிகை ஸ்ரீலீலா.

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் சமீபத்தில் பூல் புலைய்யா 3 படத்தில், நடிகை திரிப்தி டிம்ரியுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த ஜோடி, இயக்குநர் அனுராக் பாசுவின் வரவிருக்கும் இசை சார்ந்த காதல் படத்திற்காக மீண்டும் இணைவார் என்று செய்திகள் வந்தன. இது இந்தியில் சூப்பர் ஹிட்டான 'ஆஷிகி' திரைப்படத்தின் மூன்றாவது பாகமாக இருக்கும் என்றும் ஊகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த செய்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கார்த்திக் ஆர்யனின் புதிய படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார், ஸ்ரீலீலா.

இதன்மூலம், நடிகை ஸ்ரீலீலா பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார் என்பது தற்போது ...