இந்தியா, மார்ச் 4 -- அசைவ உணவுகள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவுகளாக இருக்கின்றது. அதிலும் கடல் உணவுகள் என்றால் அதில் அதிக சுவையுடன் இருக்கும் என்பது உண்மையே. கடல் உணவுகளில் பல வகைகள் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டின் கடல் புறத்தில் வாழும் மக்களுக்கு கடல் உணவுகளே பிரதான உணவாக இருந்து வருகிறது. கடலில் இருந்து பிடிக்கப்படும் உயிரினங்களில் மீன்கள் பெருமளவு சமைக்கப்படுகின்றனர். ஆனால் மீன்களை தாண்டி பல வகையான உயிரினங்கள் கடலில் இருந்து பிடிக்கப்பட்டு உணவாக சாப்பிடப்படுகிறது. ஒரு சிலருக்கு மீன் நன்றாக சமைக்க தெரியும். ஆனால் மற்ற கடல் உணவுகளான நண்டு, கனவா போன்றவைகளை சமைக்க தெரியாது. இவைகளை சுத்தம் செய்வதே பெரும் வெளியாக இருக்கும். ஆனால் இவைகளையும் எளிதாக சமைக்க முடியும் இன்று நாம் வீட்டிலேயே எளிமையாக கனவா மீன் மசாலா எப்படி செய்வது என்...