மும்பை,டெல்லி,சென்னை, மார்ச் 12 -- இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. போட்டியாளரான பாரதி ஏர்டெல் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு நாள் கழித்து, இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ புதன்கிழமை ஸ்டார்லிங்கின் இணைய சேவைகளை இந்தியாவுக்குக் கொண்டுவர ஸ்பேஸ்எக்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட், இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்கின் பிராட்பேண்ட் இணைய சேவைகளை வழங்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | JioHotstar: இன்றைய ஜியோ ஹாட்ஸ்டார் தளத...