இந்தியா, அக்டோபர் 26 -- மதுரை: மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களுக்கு செல்லும் போது காவல்துறை வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி சமூகவலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேவர் ஜெயந்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :

கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு நாளின் போது காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறிய வாகனங்கள் கண்காணிப்பு கேமராவின் அடிப்படையில் 25 நான்கு சக்கர வாகனங்கள், 6 இருச்சக்கர வாகனங்கள் என 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேவர் குருபூஜைக்கு மதுரை மாவட்டத்தில் 2000 போலீச...