இந்தியா, ஜனவரி 31 -- சிக்கன், மட்டன் சுவையில் அசத்தும் சோயா சுக்கா, இதை நீங்கள் சிக்கன், மட்டன், பன்னீர், மஸ்ரூம் என எதில் வேண்டுமானாலும் செய்யலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும். சுக்கா வறுவல்களை எப்போதும் இரும்புக் கடாய்களில் செய்வதுதான் நல்லது. செய்வதற்கும் எளிதாக இருக்கும். நீண்ட நேரம் கெடாமலும் அதன் சூடு பாதுகாக்கும். இந்த சோயா சுக்கா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் குழந்தைகளுக்கு சோயா சங்க்ஸ் என்ற மீல் மேக்கர் மிகவும் பிடித்த ஒரு உணவு. நீங்கள் இதை செய்து வைத்துவிட்டால் அவர்கள் ஸ்னாக்ஸ் போலவே சாப்பிடுவார்கள்.

* சோயா - ஒரு கப் (மீல் மேக்கர்)

(சூடான தண்ணீரில் ஊறவைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து...