இந்தியா, மார்ச் 13 -- செளந்தர்யா குறித்தான மோகன் பாபு மீது வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் கணவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து செளந்தர்யாவின் கணவர் ரகு வெளியிட்ட அறிக்கையில் ' கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் இருக்கும் சொத்தை தொடர்புபடுத்தி மோகன்பாபு மற்றும் செளந்தர்யா குறித்து தவறான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதை நான் முழுவதுமாக மறுக்கிறேன். எனக்கு மோகன்பாபுவை கிட்டத்தட்ட 25 வருடங்களாக தெரியும். எனக்கும், அவருக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. செளந்தர்யாவுக்கும், மோகன்பாபுவுக்கும் இடையே எந்த நிலத்தகராறும் இல்லை.

மோகன்பாபு சட்டவிரோதமாக செளந்தர்யாவிடம் இருந்து நிலத்தை பெற்றுக்கொண்டதாக வெளிவரும் வதந்திகளில் உண்மை இல்லை. எனக்குத் தெரிந்து, மோகன்பாபு மற்றும் செளந்தர்யா இடையே நிலம் தொடர்பாக எந்த பண பரிவர்த...