இந்தியா, பிப்ரவரி 3 -- பாலிவுட் சினிமாவில் முன்னணி பாடகராக இருப்பவர் சோனு நிகாம். பாடகராக மட்டுமல்லாமல் நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞராகவும் இருந்து வரும் இவர், புனே நகரில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டிருப்பதாக விடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கடும் முதுகு வலியை பொருப்படுத்தாமல் பாடல்கள் பாடியுள்ளார் சோனு நிகம். இந்த இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இசை நிகழ்ச்சிக்கு தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பு கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டபோதிலும், திட்டமிட்டபடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். வலியை பொருப்படுத்தாமல் மேடையில் பாடல் பாடி, நடனமாடி ரசிகர்கள் அன...