இந்தியா, பிப்ரவரி 8 -- ஏழு ஆண்டுகள் காதலுக்குப் பிறகு, சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜாஹீர் இக்பால் ஆகியோர் காதல் திருமணம் செய்துகொண்டு அழகாக வாழ்ந்து வருகின்றனர்.

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தமிழில், நடிகர் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் ஜோடியாக நடித்தவர்.

இந்துஸ்தான் டைம்ஸ் சிட்டி, ஷோ டாப்பர்ஸ் பக்கத்துக்கு காதலர் தினத்துக்காக புகைப்படம் எடுக்கும்போது, தனது மனைவி சோனாக்‌ஷி சின்ஹாவுடன் நெருக்கமாக இருக்கும் தருணத்தை ஜாஹீர் இக்பால் இழக்கவில்லை. அது இருவருக்கும் இடையே இருக்கும் காதலை பறைசாற்றியது.

இந்த போட்டோஷீட் பற்றி பேசிய சோனாக்‌ஷி சின்ஹா பற்றி கூறியதாவது, "இது மிகவும் நன்றாக இருந்தது.

இது நாங்கள் உண்மையில் காத்திருந்த ஒன்று. கடந்த ஏழு வருடங்களாக நாங்கள் ஒன்றாக பயணித்த படங்களைப் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை.

ஆனால், இப்போது நாங்...