இந்தியா, பிப்ரவரி 20 -- Soleeshwarar: உலகம் எங்கும் நீக்கமற நிறைந்து கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார் சிவபெருமான். கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருவதாக புராணங்களில் கூறப்படுகின்றன. தனக்கென சொந்த உருவமில்லாமல் லிங்கத் திருமேனியாக சிவபெருமான் உலகமெங்கும் காட்சி கொடுத்த வருகிறார்.

மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளன.

அந்த கோயில்கள் இன்று வரை வானுயர்ந்து கம்பீரமாக காணப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் வரலாற்றுச் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்த...