இந்தியா, பிப்ரவரி 9 -- இதய ஆரோக்கியத்துக்கு நீங்கள் சோடியச்சத்துக்கள் குறைவாக ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவது தான் நல்லது. அதே நேரத்தில் உங்களின் ஸ்னாக்ஸ் உங்கள் வாயில் உள்ள சுவை அரும்புகளுக்கும் விருந்தாகவேண்டும். உங்களுக்கு திருப்தியையும் கொடுக்கவேண்டும். உங்கள் இதயத்துக்கு இதமான ஸ்னாக்ஸ்கள் என்னவென்று பாருங்கள். இங்கு சோடியம் குறைவான அளவு உள்ள ஸ்னாக்ஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் சுவையும் உள்ளது. ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. உங்களின் இதயத்தை நல்ல நிலையில் வைக்க உதவுபவையாகும்.

பாதாம், வால்நட்கள் மற்றும் சூரிய காந்தி விதைகள் ஆகியவை இதயத்துக்கு தேவையான கொழுப்பு, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொடுக்கும் நட்ஸ்கள் ஆகும். இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது. எனவே ஒரு கைப்பிடியளவு நட்ஸ்கள்...