இந்தியா, ஏப்ரல் 7 -- பொன்னியின் செல்வன் சீரிஸ் படங்களில் த்ரிஷாவின் தோழியாகவும், வானதி என்ற கதாபாத்திரத்தில் தோன்ற அசத்தலான நடனம், நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சோபிதா துலிபாலா. இவர் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான மேட் இன் ஹெவன் என்ற வெப் சீரிஸிலும் கவர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் தோன்ற ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

ஹாலிவுட்டில் அறிமுகம்

இதையடுத்து சோபிதா துலிபாலா மங்கீ மேன் என்ற படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தை ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த தேவ் பட்டேல் நடித்து, இயக்குகிறார். இதைத்தொடர்ந்து மங்கீ மேன் படம் சமீபத்தில் வெளியாகியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் நியூயார்க் டைம்க்கு அளித்த பேட்டியில் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் படத்திலேயே கால் கேர்ள் கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி...