இந்தியா, பிப்ரவரி 8 -- தனது திருமணத்துக்குப் பின், நடிகர் நாகசைதன்யா அவரது மனைவி சோபிதா துலிபாலாவுடன் பிரதமர் மோடியைச் சந்தித்து நினைவுப்பரிசினை வழங்கியிருக்கின்றனர்.

தெலுங்கு திரையுலகில் கிங் நடிகர் என்று அழைக்கப்படுவபர் நாகார்ஜுனா. இவர் தனது மூத்த மகன் நடிகர் நாக சைதன்யா மற்றும் மருமகள் நடிகை சோபிதா துலிபாலாவுடன் பிப்ரவரி 8ஆம் தேதி, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவர்களுடன் நாகார்ஜுனாவின் மனைவி அமலா அக்கினேனியும் சென்றிருந்தார்.

நாகார்ஜுனாவின் தந்தை நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரைப் பற்றி, டாக்டர் யர்லகட்டா லட்சுமி பிரசாத் எழுதிய 'அக்கினேனி கா விராட் வியாக்தித்வா' என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து இன்...