இந்தியா, பிப்ரவரி 1 -- உலர் திராட்சையில் இருக்கக்கூடிய நார்ச்சத்து ஜீரணத்திற்கு பெரும் உதவியாக இருக்கிறது. கூடவே, மலச்சிக்கல் உருவாவதையும் தடுக்கிறது.

உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆகையால், இந்த திராட்சைகளை சாப்பிடும் போது இரும்புச்சத்து குறைபாடு தடுக்கப்படுகிறது. இரும்புச்சத்தை கிரகிக்கும் செயல்முறையையும் ஊக்குவிக்கிறது. அதே போல இரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்திலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.

உலர் திராட்சையில் பொட்டாசியம் சத்து இருக்கிறது. இது இரத்த அழுத்ததை சீராக்கி, இருதய நலனை பாதுகாக்கிறது.

உலர் திராட்சையில் கால்சியம் சத்தும் அடங்கி இருக்கிறது. இந்த சத்து நமது எலும்பு ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

இதில் ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் அடங்கி இருக்கின்றன. இது உடலில் இருக்கும் ஃப்ரீ ராடிக்கல்ஸை சீர...